பஹல்காம் தாக்குதல் – தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?

Spread the love

பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025, 10.00 AM சித்திரை 10, விசுவாவசு வருடம்

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர், அந்த பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, தாக்குதல் நடத்தியது எந்த பயங்கரவாத அமைப்பு என புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ‘ தி ரெசிஸ்டென்ஸ் பிராண்ட் (The Resistance Front (TRF))’ என்ற பயங்கரவாத அமைப்பு சமூக வலைதளம் மூலம் பொறுப்பு ஏற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest