
பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2025, புரட்டாசி 9, விசுவாவசு வருடம் 04-30:AM
சென்னை,
2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது. இந்த கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருது கலை வித்தகர்கள் பெயர்கள்:
பாரதியார் விருது (இயல்) முனைவர் ந. முருகேச பாண்டியன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:
- க. திருநாவுக்கரசு எழுத்தாளர்
- கவிஞர் நெல்லை ஜெயந்தா இயற்றமிழ்க் கவிஞர்
- எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் சமயச் சொற்பொழிவாளர்
- பாபநாசம் அசோக் ரமணி குரலிசை
- பா. சற்குருநாதன் ஓதுவார் திருமுறைதேவாரஇசை
- டி. ஏ. எஸ். தக்கேசி தமிழிசைப் பாடகர்
- திருச்சூர் சி. நரேந்திரன் மிருதங்கம்
- என். நரசிம்மன் கோட்டு வாத்தியம்
- கோ. பில்லப்பன் நாதசுர ஆசிரியர்
- திருக்காட்டுப்பள்ளி டி. ஜே. சுப்பிரமணியன் நாதசுரம்
- கல்யாணபுரம் ஜி. சீனிவாசன் நாதசுரம்
- திருவல்லிக்கேணி கே. சேகர் தவில்
- நாட்டியம் வழுவூர் எஸ். பழனியப்பன் பரதநாட்டிய ஆசிரியர்
- பிரியா கார்த்திகேயன் பரதநாட்டியம்
- நாடகம் பூச்சி எஸ். முருகன் நாடக நடிகர்
- காரைக்குடி நாராயணன் நாடக இயக்குநர்
- என். ஏ. அலெக்ஸ் ஆர்மோனியம்
- திரைப்படம் எஸ். ஜே. சூர்யா திரைப்பட நடிகர்
- சாய் பல்லவி திரைப்பட நடிகை
- லிங்குசாமி திரைப்பட இயக்குநர்
- ஜே. கே. (எ) எம். ஜெயகுமார் திரைப்பட அரங்க அமைப்பாளர்
- சூப்பர் சுப்பராயன் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்
- சின்னத்திரை பி. கே. கமலேஷ் சின்னத்திரை நடிகர்
- இசை நாடகம் எம். பி. விசுவநாதன் இசை நாடக நடிகர்
- கிராமியக் கலைகள் வீர சங்கர் கிராமியப் பாடகர்
- நா. காமாட்சி பொய்க்கால் குதிரை ஆட்டம்
- எம். முனுசாமி பெரியமேளம்
- பி. மருங்கன் நையாண்டிமேள நாதஸ்வரம்
- கே. கே. சி. பாலு வள்ளி ஒயில்கும்மி
- இதர கலைப் பிரிவுகள் வே. ஜீவானந்தன் ஓவியர்
2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:
- இயல் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுத்தாளர்
- முனைவர் தி. மு. அப்துல்காதர் இலக்கியப் பேச்சாளர்
- சு. முத்துகணேசன் சமயச் சொற்பொழிவாளர்
- இசை ஜெயஸ்ரீ வைத்தியநாதன் குரலிசை
- சாரதா ராகவ் குரலிசை
- பகலா ராமதாஸ் வயலின்
- நெய்வேலி ஆர். நாராயணன் மிருதங்கம்
- செம்பனார்கோயில் எஸ். ஜி. ஆர். எஸ். மோகன்தாஸ் நாதசுரம்
- சித்துக்காடு டி. ஜி. முருகவேல் நாதசுரம்
- திருக்கடையூர் டி. ஜி. பாபு தவில்
- சுசித்ரா பாலசுப்பிரமணியன் கதா காலட்சேபம்
- நாட்டியம் அமுதா தண்டபாணி பரதநாட்டிய ஆசிரியர்
- வி. சுப்பிரமணிய பாகவதர் பாகவத மேளா
- சுவாமிமலை கே. சுரேஷ் பரதநாட்டியக் குரலிசை
- நாடகம் பொன் சுந்தரேசன் நாடக நடிகர்
- கவிஞர் இரா. நன்மாறன் நாடக இயக்குநர்
- சோலை ராஜேந்திரன் நாடகத் தயாரிப்பாளர்
- திரைப்படம் விக்ரம் பிரபு திரைப்பட நடிகர்
- ஜெயா வி. சி. குகநாதன் திரைப்பட நடிகை
- விவேகா திரைப்பட பாடலாசிரியர்
- டைமண்ட் பாபு திரைப்பட செய்தித் தொடர்பாளர்
- டி. லட்சுமிகாந்தன் திரைப்பட புகைப்படக் கலைஞர்
- சின்னத்திரை மெட்டிஒலி காயத்ரி சின்னத்திரை நடிகை
- இசை நாடகம் என். சத்தியராஜ் இசை நாடக நடிகர்
- கிராமியக் கலைகள் ந. ரஞ்சிதவேல் பொம்மு தேவராட்டம்
- மு. கலைவாணன் பொம்மலாட்டம்
- எம். எஸ். சி. ராதாரவி தப்பாட்டம்
- கே. பாலு நையாண்டிமேள நாதஸ்வரம்
- இதர கலைப் பிரிவுகள் ஆர். சாமிநாதன் பண்பாட்டுக் கலை பரப்புனர்
- கே. லோகநாதன் ஓவியர்
2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்:
- இயல் கவிஞர் கே. ஜீவபாரதி இயற்றமிழ்க் கவிஞர்
- இசை ஆர். காசியப் மகேஷ் குரலிசை
- ஹேமலதாமணி வீணை
- வே. பிரபு கிளாரினெட்
- பி. பி. ரவிச்சந்திரன் நாதசுரம்
- ஞான நடராஜன் நாதசுரம்
- எம். எஸ். ஆர். பரமேஸ்வரன் நாதசுரம்
- ராமஜெயம் பாரதி தவில்
- பா. ராதாகிருஷ்ணன் தவில்
- நாட்டியம் க. தனசுந்தரி பரதநாட்டிய ஆசிரியர்
- வி. ஜெயப்பிரியா குச்சுப்பிடி நாட்டியம்
- கே. ஹரிபிரசாத் பரதநாட்டியக் குரலிசை
- நாடகம் திரு. என். ஜோதிகண்ணன் பழம்பெரும் நாடக நடிகர்
- வானதிகதிர் (எ) பெ. கதிர்வேல் நாடக நடிகர்
- வி. கே. தேவநாதன் விழிப்புணர்வு நாடக நடிகர்
- திரைப்படம் கே. மணிகண்டன் திரைப்பட நடிகர்
- எம். ஜார்ஜ் மரியான் திரைப்பட குணச்சித்திர நடிகர்
- அனிருத் திரைப்பட இசையமைப்பாளர்
- ஸ்வேதா மோகன் திரைப்பட பின்னணிப் பாடகி
- சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் திரைப்பட நடன இயக்குநர்
- நிகில் முருகன் திரைப்பட செய்தித் தொடர்பாளர்
- சின்னத்திரை என். பி. உமாசங்கர்பாபு சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்
- அழகன் தமிழ்மணி சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
- இசை நாடகம் ஏ. ஆர். ஏ. கண்ணன் இசை நாடக நடிகர்
- ஆர். எம். தமிழ்ச்செல்வி இசை நாடக நடிகை
- கிராமியக் கே. எம். ராமநாதன் தெருக்கூத்து
- டி. ஜெகநாதன் வில்லுப்பாட்டு
- கலைகள் சி. மகாமணி நையாண்டிமேள தவில்
- ஆ. சந்திரபுஷ்பம் கிராமியப் பாடல் ஆய்வாளர்
- இதர கலைப் பிரிவுகள் சு. தீனதயாளன் சிற்பி