பிரதமர் மோடி பிரதமருடன் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, மே, 05, 2025, 07.00 AM சித்திரை 22, விசுவாவசு வருடம்

புதுடெல்லி,

இந்தியா- – பாகிஸ்தான் பதட்டத்துக்கு இடையே இந்திய கடற்படை அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் போர் பயிற்சியை துவக்கி உள்ளது. இந்த நிலையில் விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு வகையில் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதை இந்திய ராணுவ உளவுத்துறை உறுதி செய்தது.

இதையடுத்து பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு இந்தியா முப்படைகளையும் தயார் படுத்தி வருகிறது. அதோடு பாகிஸ்தானுக்கும் பல்வேறு நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்தி உள்ளது.

முதல் கட்டமாக பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய மத்திய அரசு சிந்து நதிநீரை முழுமையாக தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நிதி உதவிகளை தடுத்து நிறுத்தவும் இந்தியா முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் வர்த்தக கப்பல் கள் இந்தியாவுக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய முப்படைகளும் வகையில் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ஆய்வு செய்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடைேய கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.

இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்யும் வகையில் எல்லைக்கட்டுப் பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் இரவு துப்பாக்கியால் சுட்டப்படி உள்ளனர். நேற்று இரவு 10-வது நாளாக பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களுக்கு இந்திய தரப்பில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் விடுப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஆயுதங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் இந்திய போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகளும் அந்த நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியா முழுவதும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவானபோது அரபிக் கடலில் அக்ரான் என்ற பெயரில் போர் பயிற்சிகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளன. நேற்று அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில் இந்திய போர் கப்பல்கள் அணிவகுத்து போர் பயிற்சியை தொடங்கின.

இந்நிலையில் இந்திய கடற்படையின் ஊடக பிரிவு புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்ப்பல், துருவ ரக ஹெலிகாப்டர், ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஒன்றாக அணிவகுத்துள்ளன. (கடலிலும், கடலுக்கு மேலேயும், கடலுக்கு கீழேயும்) – கடற்படையின் மூன்று சக்திகள் என அந்த படத்துக்கு தலைப்பு கொடுக்கப்ப்டடுள்ளது. இந்தப்படம் விரைவாகப் பரவியது.

கடற்படை கப்பல்கள் எல்லாம் போருக்கு தயார் நிலையல் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை இந்த படத்தை வெளியிட்டுள்ளது.இந்த போர் பயிற்சி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து கடற்படை தளபதி நேற்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எனவே தற்போது அரபிக் கடலில் நடந்து வரும் இந்திய போர் கப்பல்களின் போர் ஒத்திகை பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து இந்த போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இந்திய கடற்படை கப்பல்கள் நீண்டதூர தாக்குதலுக்கு தங்களை தயார்ப்படுத்தும் வகையில் பயிற்சி நடப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை மிக மிக துல்லியமாக தாக்கும் பயிற்சிகளும் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்திய கடற்படை போன்று வட மண்டலத்தில் இந்திய விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதட்டம் தொடர்ந்து நீடித்தப்படி உள்ளது.

எனவே இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியபடி உள்ளது. குறிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஊடுருவும் என்று எதிர்பார்த்து பல இடங்க ளில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது.

இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பல்வேறு நாட்டு தலைவர்களிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தன்னிலை விளக்கம் அளித்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

yuganesan@yahoo.com

yuganesan@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest