South Indian Crime Point

– Investigation Weekly Tamil Magazine

Crime/குற்றம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு

Spread the love

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2025, 06.05 AM சித்திரை 14, விசுவாவசு வருடம்

ஸ்ரீநகர்,

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 14 பேர் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் தாக்குதல் நடந்த இடத்தில் என். ஐ. ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை குறிவைத்து, உளவுத்துறை நிறுவனங்கள் தயாரித்த பயங்கரவாதிகளின் 14 பேர் பெயர் பட்டியலை உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

உளவுத்துறை அமைப்புகள் வெளியிட்டுள்ள பயங்கரவாதிகளின் பெயர்கள்:

  1. அடில் ரெஹ்மான் டென்டூ (21)
  2. ஆசிப் அகமது ஷேக் (28)
  3. அஹ்சன் அகமது ஷேக் (23)
  4. ஹாரிஸ் நசீர் (20)
  5. ஆமிர் நசீர் வானி (20)
  6. யாவர் அகமது பட் (28)
  7. ஆசிப் அகமது காண்டே (24)
  8. நசீர் அகமது வானி (21)
  9. ஷாஹித் அகமது குட்டாய் (27)
  10. ஆமிர் அகமது தர் (32)
  11. அட்னான் சபி தார் (35)
  12. ஜுபைர் அகமது வானி (39)
  13. ஹாரூன் ரஷீத் கனாய் (32)
  14. ஜாகிர் அகமது கனி (29)

20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் ஜம்மு காஷ்மீரில் தங்கி, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest